Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோ ஹோன்டா விற்பனை அதிகரிப்பு

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2009 (10:12 IST)
ஹீரோ ஹோன்டா மோட்டார் பைக் விற்பனை 22 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, ஹீரோ ஹோன்டா, மே மாதத்தில் 3,82,678 மோட்டார் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டு மே மாத்துடன் ஒப்பிடுகையில் 22.5% அதிகம்.
( சென்ற மே மாதம் விற்பனை 3,12,317).

அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் ஹீரோ ஹோன்டா 3,70,575 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் விற்பனை 30% அதிகரித்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல்-மே ஆகிய இரண்டு மாதங்களில் மொத்தம் 7,53,253 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற நிதி ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களுடன் ஒப்பிடுகையில் 25.8% அதிகம் (சென்ற நிதி ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் விற்பனை 5,98,569 ).

இதன் விற்பனை உயர்வு பற்றி விற்பனை பிரிவு துணை தலைவர் அனில் துயா கூறுகையில், கடந்த சில வருடங்களாக கடைபிடித்த வர்த்தக கொள்கையால், தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருகிறது. புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துதல், விற்பனை மையங்களை விரிவுபடுத்துதல், புதிய பகுதிகளில் விற்பனை விரிவுபடுத்துதல் போன்றவைகளால் விற்பனை அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் பரந்த அளவில் 3,500 விற்பனை மையங்கள் உள்ளன. இந்த வருட இறுதிக்குள் 4 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

Show comments