Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...!!

Orange Fruit
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:55 IST)
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.


ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுக்கிறது.

ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இதில் உள்ள பொலேட் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றி மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.

ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் ஏற்படுவது மிக குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் எனும் அமிலமாகும். உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பினை கரைத்து வெளியேற்ற பெரிதும் பயன்படுகிறது.

ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும் முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிபடுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பன்னீர் சீஸ் பால்ஸ் செய்ய !!