Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பருத்தி தேநீர் அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்...!!

Webdunia
செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பலராலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும். 
செம்பருத்தி இலை தேநீரை பருகும் பலருக்கும், உயர் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.
 
செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது. அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும்  உதவுகிறது. 
 
பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சோர்வுகளிலிருந்து விடுபடலாம். மூளைக்கு தேவையான பலத்தைக் கொடுக்கக் கூடியது.  பூவை உலர்த்தி பொடி செய்து டீ போல் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். பாலில் சாப்பிட்டால் உடல் ஊட்டம் பெறும். சிறுவர்களுக்கு உடம்பு  பெருக்கும்.
 
இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து சாப்பிட வெள்ளை, வெட்டை நோய் குணமாகும். இதன் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி  காலை, மாலை குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும். அதாவது இதய பலவீனம், மார்பு வலி முதலியவை தீரும்.
 
இதன் பூவை சுத்தமாக கழுவி நெய்யில் வதக்கி பெண்கள் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகும். 100 கிராம் பூக்களை தண்ணீர்ல் போட்டு பிசைந்து வடிகட்டி சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வர மேக வெள்ளை, ரத்த பிரமேகம் குணமாகும். குழந்தைகளுக்கு  கொடுத்து வந்தால் கணைச் சூட்டை குறைக்கும்.
 
செம்பருத்தம் பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தடவி வர மூளை  குளிர்ச்சி அடையும். மயிர் கால்கள் உரம் பெற்று முடி கருத்து வளரும். இளநரை கண்ணெரிச்சல் தீரும்.
 
இச்செடியின் வேறுடன் ஆடா தோடை இலை சேர்த்து கொதிக்க வைத்து கொடுக்க இருமல் தீரும். மலராத மொட்டுக்களை உலர்த்தி இடித்து  தூள் வைத்துக் கொண்டு தண்ணீரில் கலக்கி சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் நீங்கும். நெய்யில் சாப்பிட ஆண்மை பெருகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments