Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதாக கிடைக்கும் கோரைக்கிழங்கில் இத்தனை மருத்துவகுணங்கள் உள்ளதா...?

Webdunia
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், சாலையோரங்களில், தோட்டங்களில் கிடைக்கும் மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு பாதுகாப்பான எளிய மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.
அந்த வகையில், பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது. மாதவிலக்கை தூண்டக் கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு  மருந்தாக பயன்படுகிறது.
 
பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மை தருகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக  விளங்குகிறது. வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.
 
கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும். 
 
முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும். பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments