புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு இன்று வாக்கெடுப்பு கோரும் நிலையில் அவருடைய ஆட்சி ஒருவேளை கவிழ்ந்தால் என்னென்ன நடக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்
புதுவையில் இன்று நாராயணசாமி அரசு கவிழ்ந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 12 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கும் நிலையில் அதிமுகவிலிருந்து 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது
மேலும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஒரு சிலரை சபாநாயகரின் அதிகாரத்தை பயன்படுத்தி தகுதி நீக்கம் செய்து ஆளும் காங்கிரஸ் அரசு தப்பிக்கும் வழியும் உள்ளது என்று கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி கடைசியாக நாராயணசாமி தனது அமைச்சரவையை வாக்கெடுப்புக்கு முன்னரே ராஜினாமா செய்வார் என்றும், அதன் பின்னர் அவர் காபந்து முதல்வராக நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது மேற்கண்ட இந்த நான்கில் என்ன நடக்கும் என்பதை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை வாக்கெடுப்பின் வரை பொறுத்திருந்து பார்ப்போம்