Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜம்மு - காஷ்மீரை இரண்டாக பிரிப்பதால் என்ன நடக்கும்??

ஜம்மு - காஷ்மீரை இரண்டாக பிரிப்பதால் என்ன நடக்கும்??
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (13:17 IST)
ஜம்மு - காஷ்மீரை இரண்டாக பிரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இதனால் என்னென்ன நடக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் பல இடங்களில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
webdunia
அங்கு 38000 துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜம்மு காஷ்மீரின் முக்கியமானத் தலைவர்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
 
இதையடுத்து இன்று காலை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். 
webdunia
இப்படி ஜம்மு - காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதால் என்னென்ன நடக்கும் என்பது பின்வருமாறு... 
 
# பிரிவினைவாத குழுக்கள் இடையே பெரும் பிளவு ஏற்படும். பிரிவினைவாதிகளின் போராட்டம் அதிகரிக்ககூடும். 
# தீவிரவாத இயக்கங்கள் எங்கு செயல்படுவது என்று குழம்பும் நிலை ஏற்படும். 
# மத்திய அரசு காஷ்மீரில் மட்டும் படைகளை குவிக்க எளிதாக இருக்கும். 
# சீனா, பாகிஸ்தான் எங்கு ஆக்கிரமிப்பு செய்வது, எந்த பகுதி மீது கவனம் செலுத்துவது என்று தெரியாமல் திணறும். 
# லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் 
# ராணுவம் கூடுதல் பலம் அடையும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய வானம் புதிய பூமி – ட்விட்டரில் கூத்தாடும் தமிழக பாஜக