அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட நாசவேலையா? ப்ளாக் பாக்ஸில் இருந்தது என்ன? - ஒன்றிய அமைச்சர் பரபரப்பு தகவல்!

Prasanth K
திங்கள், 30 ஜூன் 2025 (09:27 IST)

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து ஒரு திட்டமிட்ட சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர் திடீரென விழுந்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர மற்றவர்கள் பலியானார்கள்.

 

உலகை உலுக்கிய இந்த விமான விபத்து தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து துறை விசாரணையை நடத்தி வருகிறது. விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ப்ளாக் பாக்ஸில் அடங்கியுள்ள தகவல்கள் சமீபத்தில் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு மீட்கப்பட்டன.

 

இந்நிலையில் விமான விபத்து விசாரணை குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் முரளிதர் மோஹூல், உலகை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிடப்பட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். ப்ளாக் பாக்ஸில் கிடைத்த ரெக்கார்டிங் தரவுகளின் அடிப்படையில் பல கோணங்களில் விசாரணை நடந்து வருவதாகவும், பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments