Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு ஆதரவாக திடீரென பேசிய உத்தவ் தாக்கரே.. இந்தியா கூட்டணியினர் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (14:22 IST)
பிரதமர் மோடியை இதுவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்த உத்தவ் தாக்கரேதிடீரென நான் மோடிக்கு எதிரியில்லை என பேசி இருப்பது இந்தியா கூட்டணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது 
 
ஏற்கனவே இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகிவிட்ட நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நான் மோடிக்கு எதிரியில்லை, ஆனால் மோடி தான் என்னை எதிரியாக பார்த்து வருகிறார் என்று கூறியுள்ளார். 
 
மேலும் மோடிக்கு பிரச்சனை ஏற்பட்ட போது எங்கள் தந்தை தான் அவருக்கு உதவி செய்தார், ஆனால் மோடியோ எங்கள் எதிரிக்கு உதவி செய்து என்னுடைய கட்சியை உடைத்து உள்ளார் என்று கூறியுள்ளார். 
 
இருப்பினும் உத்தவ் தாக்கரே தான் மோடிக்கு எதிரியில்லை என்று கூறியதை அடுத்து மீண்டும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஏற்படுமா? மீண்டும் இந்தியா கூட்டணியை உடையுமா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments