இன்று முதல் வி.ஐ.பி. சிறப்பு தரிசனம் நேரம் மாற்றம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 1 மே 2025 (10:59 IST)
கோடை விடுமுறை பருவம் தொடங்கியதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கோயிலில் தரிசன ஒழுங்குமுறையில் சில முக்கிய மாற்றங்களை திருப்பதி தேவஸ்தானம்  இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.
 
பக்தர்கள் கூட்டம் கட்டுப்பட வேண்டிய தேவை ஏற்படவே, குறிப்பாக VIP தரிசனத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மந்திரிகள், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்நிலை விருந்தினர்களுக்கு மட்டும் சில நாட்களில் தரிசன வாய்ப்பு வழங்கப்படும். குறிப்பாக, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளை தவிர மற்ற தினங்களில் VIP பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் தரிசன அனுமதி கிடைக்காது.
 
ஜூலை 15-ம் தேதி வரை அனைத்து VIP பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில் VIP தரிசன நேரங்கள் பின்வருமாறு மாறியுள்ளன:
 
உயர் அதிகாரிகளுக்கு: காலை 5.45 மணி
 
எம்.பி./எம்.எல்.ஏக்கள்: காலை 6.30 மணி
 
பொதுப் பிரேக் தரிசனம்: காலை 6.45 மணி
 
ஸ்ரீவாணி தரிசனம் (ரூ.10,000): காலை 10.15 மணி
 
நன்கொடையாளர்கள்: காலை 10.30 மணி
 
ஓய்வுபெற்ற ஊழியர்கள்: காலை 11.00 மணி
 
இவை அனைத்தும் பரிசீலனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றும், பக்தர்கள் ஒத்துழைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments