Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வானில் தோன்றிய அரிய நிகழ்வு.. ஆர்வமாக கண்டு களித்த மக்கள்..

வானில் தோன்றிய அரிய நிகழ்வு.. ஆர்வமாக கண்டு களித்த மக்கள்..

Arun Prasath

, வியாழன், 26 டிசம்பர் 2019 (11:25 IST)
வானில் தோன்றிய நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை சூரிய கண்ணாடி மூலம் ஆர்வமாக கண்டுகளித்தனர் மக்கள்.

30 ஆண்டுகளுக்கு  பின் நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஊட்டியில் இன்று காலை பாதியளவு தெரிய தொடங்கியது. சூரியனை நிலவு படிபடியாக மறைத்து பின்பு சூரியனின் நடுப்பகுதியை 93% மறைத்தது. இதனால் சூரியன் நெருப்பு வளையம் போல் தோன்றியது.

தமிழகத்தில்  கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரிந்தது. ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலே தெரிய வந்தது. மேலும் தென் இந்தியாவின் கேரளா மாநிலம் பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு தெரிந்தது.
webdunia

துபாயில் முதலில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய தொடங்கிய நிலையில், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் தெரிந்தது. இந்நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதால், மக்கள் சூரிய கண்ணாடி மூலம் கிரகணத்தை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

 இது போன்ற அரிய நிகழ்வு அடுத்து 2013 –ல் மே மாதம் தான் நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த சூரிய கிரகணம் 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான், ஹரியானா ஆகிய பகுதிகளில் தோன்றும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரகணத்தை பார்க்க முடியவில்லை! – பிரதமர் மோடி வருத்தம்