பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! – எதிர்கட்சிகள் அதிரடி முடிவு!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (08:56 IST)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க குரல் எழுப்பி வரும் எதிர்கட்சிகள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி 4 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் நிலையில் நாடாளுமன்ற கூட்டம் தொடர்ந்து 4 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிடும் வரையில் போராட்டம் தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கை மற்றும் விளக்கம் தராத பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 26 கட்சிகள் அடங்கிய மெகா எதிர்கட்சி கூட்டணி முடிவு செய்துள்ளது. இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments