Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட்ட திரையுலக பிரபலங்களின் நிலை என்ன? முழு விவரங்கள்..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (12:14 IST)
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த சில மணி நேரங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி 296 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 229 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. 
 
தமிழகத்தை பொறுத்த வரை திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தலா ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் சில தொகுதிகளில் இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவர்களது நிலைமை என்ன என்பதை தற்போது பார்ப்போம். 
 
தமிழகத்தைப் பொருத்தவரை நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் பின்னடைவில் உள்ளார் என்பதும் அந்த தொகுதியில் விஜய பிரபாகரன் தான் முன்னிலை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் கேரளாவில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி, மாண்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத் ஆகிய இருவருமே முன்னிலையில் உள்ளனர். 
 
மேலும் மதுரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகை ஹேமா மாலினி முன்னிலையில் உள்ளார் என்பதும் மேற்குவங்க மாநிலத்தில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நடிகர்  சத்ருகன் சின்ஹா முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments