Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் தேர்தல் நடந்தால் இதே முடிவுகள்தான் கிடைக்கும்: ப.சிதம்பரம்

காஷ்மீரில் தேர்தல் நடந்தால் இதே முடிவுகள்தான் கிடைக்கும்: ப.சிதம்பரம்
, திங்கள், 9 அக்டோபர் 2023 (10:19 IST)
காஷ்மீரில் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் இதே முடிவு தான் கிடைக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் கூறியபோது ’கார்கில் மாவட்டத்தை நிர்வாகம் செய்யும் லடாக் - கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. பாஜக படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது மற்றும் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை ரத்து செய்து, அதனை யூனியன் பிரதேசங்களாக மாற்றியது, ஆகியவர் பாஜகவின் நடவடிக்கையை மக்கள் முழுமையாக எதிர்த்துள்ளார்கள் என்பதுதான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன

காஷ்மீரின் சட்டமன்ற தேர்தல் இன்று நடத்தப்பட்டாலும் இதே முடிவுதான் கிடைக்கும் என்றும் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்; 1100ஐ கடந்த பலி எண்ணிக்கை!