Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை..! தேர்தலில் போட்டிடுவது சஸ்பென்ஸ்..!! ஆளுநர் தமிழிசை..!!

Senthil Velan
வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:02 IST)
புதுச்சேரியில் சட்டமன்ற கட்டுவதற்கான கோப்பு தன்னிடம் நிலுவையில் இல்லை என சபாநாயகர் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தலில் போட்டிடுவது சஸ்பென்ஸ் எனவும் கூறியுள்ளார்
 
புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை  மற்றும் இகவர்மெண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில்  புதுச்சேரியில் 10 படுக்கைகள் கொண்ட ஐசியு  திட்டம் தொடக்க விழா மற்றும் தொலைதூர ஐசியூ மையம் திறப்பு விழா கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்றது. 
 
இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு 10 படுக்கைகள் கொண்ட ஐசியு  திட்டத்தைத் தொடங்கி வைத்து, தொலைதூர ஐசியூ மையத்‌தினைத் திறந்து வைத்தனர்‌. 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், புதுச்சேரியில் சட்டமன்றம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான கோப்பு  கடந்த ஐந்து மாதங்களாக நிலுவையில் உள்ளதாக சபாநாயகர் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, தன்னிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை, உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பிவிட்டதாகவும், அவர்கள் சில விளக்கங்களை கேட்டு இருப்பதாக பதில் அளித்தார். 

ALSO READ: நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கிறார் ஆஸ்திரேலியா பிரதமர்..!!
 
மேலும்  தன்னிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை எனவும் கூறினார். தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அது சஸ்பென்ஸ் என கூறிவிட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments