நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

Mahendran
திங்கள், 5 மே 2025 (12:17 IST)
பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அடிக்கடி கூட்டணி மாறி முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் கூட்டணி மாறப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
வருங்காலத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வேறு கூட்டணிக்கு மாறலாம் என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில் நிதிஷ்கார், அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவை விட்டு இனி எங்கும் செல்லப் போவதில்லை என்றும் கூட்டணி மாறும்போது நானாக மாறவில்லை என்றும் எனது கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் தான் என்னை மாற வைத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ஆனால் அதே நேரத்தில் இனிமேல் நான் பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்றும் எனது கட்சி என்னை எங்கும் அங்கும் ஓரிரு முறைகள் மாற வைத்தாலும் இனி மீண்டும் அது நடக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் என்னை முதன் முதலில்  முதல்வர் ஆக்கியது மறைந்த வாஜ்பாய் தான் என்றும் அவர் நினைவு கூர்ந்தார். இதனை அடுத்து அவர் மீண்டும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்றும் பாஜக கூட்டணி எல்லாம் தொடர்ந்து இருப்பேன் என்பதையும் உறுதி செய்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments