Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்: கேஜிரிவால் குற்றச்சாட்டு

மோடியின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்: கேஜிரிவால் குற்றச்சாட்டு
, சனி, 28 மே 2016 (22:31 IST)
பிரதமர் நரேந்திர மோடி பெரும்பாலான ஊடகங்களை தன் வசம் கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
நரேந்திர மோடி எப்போதும் தன்னை விளம்பரம் செய்வதில் கெட்டிக்காரர். அவர் குஜராத் மாநிலத்தை வைத்து இந்தியா முழுவதும் விளம்பரம் செய்தே பிரதமரானவர். தற்போது சமுக வலைதளமான போஸ்புக்கில் அதிக லைக் பெற்ற இரண்டாவது தலைவர் என்ற பெருமைக்கு உடையவர். 
 
இவர் இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களை கட்டுப்படுத்துவதாக டெல்லி முதலமைச்சர் கேஜிரிவால், அவரது டுவிட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேஜிரிவால் குறிப்பிட்டுள்ளதாவது:-
 
"பத்திரிகையாளர் ரானா அயூப் எழுதியுள்ள "குஜராத் ஃபைல்ஸ்: அனாடமி ஆஃப் ஏ கவர் அப்' எனும் நூல் குறித்து பிரதான ஊடகங்கள் யாரும் செய்தி வெளியிடவில்லை. இது நமக்கு எதைத் தெரிவிக்கிறது? பிரதமர் மோடி பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமையாளர்களை மோடி கட்டுப்படுத்துதுகிறார் என்பதைத்தான் தெரிவிக்கிறது.
 
குறிப்பாக அந்த புத்தகத்தில் 2001 முதல் 2010 வரை குஜராத்தில் மோடியின் ஆட்சிப் பற்றி எழுதப்பட்டுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிகா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க கோரிக்கை