Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் புதிய வகை நோய் பரவல்; மக்கள் பீதி!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் கேரளாவில் புதிய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவும் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பாதிப்புகள் குறைந்து மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வரும் நிலையில் கேரளாவில் புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சூடானிலிருந்து திரும்பிய ராணுவ வீரர் ஒருவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை சோதனை செய்ததில் ப்ளாஸ்மோடியம் ஓவல் என்னும் மலேரியாவின் புதிய ஜீனஸ் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ”சரியான தடுப்பு முறையிலும், சரியான நேரத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்த நோய் பரவல் தடுக்கக்கூடியதே” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments