Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி.,

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (23:12 IST)
இந்திய நாட்டு உள்விவகாரத்தில் வெளிநாட்டவர் தலையிட வேண்டாம் நீங்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளதற்கு  கார்த்தி சிதம்பரம் விமர்சித்து பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் எண்பது நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல போர்னோ நடிகையான மியா கலீஃபாவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மனித உரிமை மீறல்… புதுடெல்லியில் இணையத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதா? நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஆனால், இவருக்கு எதிரான நெட்டிசன்கள் எதிர்ப்புத்தெரிவித்து டுவீட் பதிவிட்டுவருகின்றனர்.

ஏற்கனவே,பாடகி ரிஹானா, டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி ஏன் நாம் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தலைவி பட நாயகி, கங்கனா, அவரை முட்டாள் எனக்கூறியதுடன் , அவர்கள் விவசாயிகள் அல்ல, நாட்டைத்துண்டாட முயல்கிற தீவிரவாதிகள் எனக் கூறியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருதுகுறித்துப் பதிவிட்டுள்ளதாவது :

இந்தியாவி தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக  மட்டும் இருங்கள் பங்கேற்பாளர்களாக வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும். இந்தியா ஒற்றுமையால் கட்டமைப்பட்டது எனத் தெரிவித்தார்.

தற்போது இதுகுறித்து கார்த்திக் சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
கிரிக்கெட் வீரர்களை டுவிட்டர் பிரச்சாரத்திற்காக ஈடுபடுத்த வேண்டாம் என்று கூறி டுவிட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டவர் குரல் கொடுத்ததற்காக சச்சின் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் கூறிய இதே கருத்தைத்தான் சுரேஷ் ரெய்னாவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments