ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

Siva
வெள்ளி, 6 ஜூன் 2025 (07:41 IST)
ஆன்லைனில் தற்போது அனைத்து பொருள்களையும் வாங்கும் வழக்கம் வந்துவிட்ட நிலையில், அதிகமாக ஆடைகள் வாங்கப்படுகிறது என்பதும், கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால், அதே நேரத்தில் ஷோரூமில் நேரில் போய் வாங்கும் போது, அந்த டிரஸ் நமக்கு கரெக்டாக இருக்கிறதா என்பதை ட்ரையல் ரூமில் போட்டு பார்த்து வாங்குவோம். ஆனால் ஆன்லைனில் அந்த வசதி இல்லை என்பதால், பலர் தயக்கம் காட்டுகின்றனர்.
 
இதற்கு கூகுள் ஒரு தீர்வை கண்டுள்ளது. ஏ.ஐ. உதவியுடன் ஆடைகளை அணிந்து பார்க்கும் வகையில் "விர்ச்சுவல் ட்ரை இட் ஆன்" என்ற அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. நாம் தேர்வு செய்யும் ஆடைகளை புகைப்படத்தில் பதிவிட்டால், அது நமக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை பார்க்க முடியும்.
 
ஏ.ஐ. மூலம் இந்த வசதி தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஆன்லைனில் வாங்கும் ஆடையை கூட நாம் போட்டு பார்த்து வாங்குவது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும் என்றும், இதனால் ஆடை வாங்குபவர்கள் திருப்தி அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments