Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காணாமல் போன முன்னாள் முதலமைச்சர்.. கால்வாயில் பிணமாக மீட்பு..!

காணாமல் போன முன்னாள் முதலமைச்சர்.. கால்வாயில் பிணமாக மீட்பு..!

Mahendran

, புதன், 17 ஜூலை 2024 (13:45 IST)
சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் காணாமல் போன நிலையில் அவருடைய உடல் கால்வாயில் மீட்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகி உள்ளது.
 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம், இமயமலையை ஒட்டி இருக்கும் நிலையில் இந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆக இருந்தவர் ஆர்சி பவுடியால். 90 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர் 
அவர் கண்டுபிடிக்கப்படாததை அடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது என்பதும் இந்த குழு தீவிரமாக தேடி வந்த நிலையில் புல்பாரி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் அவருடைய உடல் மிதந்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து உடலை கைப்பற்றி தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம், உடைகள் ஆகியவற்றை கொண்டு அவரது குடும்பத்தினர் அவரை உறுதி செய்தனர். அவருடைய மறைவுக்கு சிக்கிம் முதலமைச்சர் தபங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உண்மை கண்டுபிடிக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசின் திட்டத்தை ஏற்க மறுப்பு.! தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.2,000 கோடி நிதி நிறுத்தம்..!!