Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது மகளிடம் நிர்வாண வீடியோ கேட்டு மிரட்டிய தந்தையின் வக்கிரம்!

16 வயது மகளிடம் நிர்வாண வீடியோ கேட்டு மிரட்டிய தந்தையின் வக்கிரம்!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (13:33 IST)
பஞ்சாப் மாநிலத்தில் 41 வயதான தந்தை ஒருவர் தனது 16 வயது மகளிடம் அவளது நிர்வாண வீடியோவை பதிவு செய்து அனுப்புமாறு வற்புறுத்தியும் மிரட்டல் விடுத்தும் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சமீப காலமாக பாலியல் அத்துமீறல்கள் உறவுமுறை வித்தியாசம் இல்லாமல் மிகவும் மோசமாக நடக்கின்றன. தந்தைகளே தாங்கள் பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் நம் நாட்டில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
 
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 40 வயதான ஒருவர் தனது 16 வயது மகளிடம் அவளின் நிர்வாண வீடியோவை பதிவு செய்து தனக்கு அனுப்புமாறு வற்புறுத்தியுள்ளார்.
 
ஆனால் அந்த சிறுமி அவ்வாறு செய்யாமல் மறுத்துள்ளார். ஆனால் சிறுமியின் தந்தை சிறுமியிடம் நீ மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி இந்த விவகாரத்தில் தனது மாமாவின் உதவியை நாடியுள்ளார்.
 
இதனையடுத்து அந்த சிறுமியின் மாமா அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சிறுமியின் தந்தை மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த காவல்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. தற்போது அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீசார் தங்கள் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்