Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் சசிகலா ; புகைப்படம், வீடியோ செம ரேட் - செல்போனுடன் அலையும் சிறைக்கைதிகள்

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (15:36 IST)
அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, ஊடகங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் சிறைக்கதிகள் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த 14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.    
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக அவர்கள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.


 

 
அந்நிலையில் சிறையில் சாதாரண உடை அணிந்து, கைப்பையுடன் சசிகலா உலவும் வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது. சிறைக்குள் நடந்து வரும் விதிமீறல்களை இந்த வீடியோ வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்நிலையில அந்த வீடியோ சில கைதிகள் மூலம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கைதி எடுத்த அந்த வீடியோவை, கர்நாடக தொலைக்காட்சி நிறுவனம் ரூ.2 லட்சம் விலை கொடுத்து வாங்கி ஒளிபரப்பியதாக தெரிகிறது.
 
மேலும், சிறைக்குள் இருக்கும் கோஷ்டி பூசல் காரணமாகவும், ரகசியமாக வீடியோக்கள் எடுக்கப்பட்டு ஊடகங்களுக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. ஏனெனில், சிறைக்குள் நடைபெறும் விதி மீறல்களை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மூலம் செய்தி வெளியிடுவதை தமிழக, கர்நாடக மற்றும் வட மொழி ஊடகங்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.  
 
எனவே, சில கைதிகள் இதை வருமானமாக மாற்றிவிட்டதாக தெரிகிறது. அப்படி கைதிகள் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments