Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் மகளுக்கும், அம்மாவுக்கும் நடந்த திருமணம்! – கோரக்பூரில் ஆச்சர்ய சம்பவம்!

ஒரே நாளில் மகளுக்கும், அம்மாவுக்கும் நடந்த திருமணம்! – கோரக்பூரில் ஆச்சர்ய சம்பவம்!
, திங்கள், 14 டிசம்பர் 2020 (12:45 IST)
கோரக்பூரில் தனது இளைய மகள் திருமணத்தின்போதே தாயும் மற்றொரு நபரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் பெலி தேவி. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கன் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர். பெலி தேவியின் கணவர் 25 வருடங்களுக்கு முன்னரே இறந்துவிட்ட நிலையில் பெலி தேவி தன் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து அனைவருக்கும் திருமணமும் நடத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது கடைசி மகள் இந்துவிற்கும் வரன் பார்த்து திருமணம் நிச்சயித்துள்ளார். இந்நிலையில் கோரக்பூரில் 63 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைய மகள் இந்துவிற்கு திருமணம் நடந்த நிலையில், அதே நிகழ்ச்சியில் பெலி தேவி இறந்த தனது கணவரின் சகோதரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ள பெலி தேவியின் பிள்ளைகள் தனது அம்மா தனக்கென ஒரு வாழ்க்கையை இத்தனை வருடங்கள் கழித்து ஏற்படுத்தி கொண்டது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானும், எம்ஜிஆரும் ஒரே இனத்தவர்கள்! – புது ரூட்டில் கமல்ஹாசன்!