Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 31 லட்சத்தை கடந்தது கொரோனா; குணமடைவோர் அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (09:40 IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா புதிய பாதிப்புகள் 61 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் கடந்த மாதம் ஜூலை முடிவில் மத்திய அரசு ஊரடங்கை ரத்து செய்தது. அதை தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்திற்கும் அதிகாமான பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 31,06,348 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57,542 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 23,38,035 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 7,10,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா இறப்பு விகிதம் 1.82% ஆகவும், குணமடைவோர் விகிதம் 77% ஆகவும் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments