போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இல்லை.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த சசிதரூர்..!

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (13:45 IST)
அமெரிக்கா போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டவுடன் மோடி சரண்டர் ஆகிவிட்டார் என்று ராகுல் காந்தி பேசிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் தலையீடு காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போரை இந்தியா நிறுத்திவிட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி சரண் அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்திரா காந்தி மட்டும் உயிரோடு இருந்திருந்தால், பாகிஸ்தானை இரண்டாக பிளந்து இருப்பார்" என்றும் அவர் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், அமெரிக்காவில் விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் ராகுல் காந்தியின் விமர்சனத்தை மறுத்துள்ளார்.
 
"போரினை நிறுத்துமாறு இந்தியாவை யாரும் வற்புறுத்தவில்லை.  நாங்களே பாகிஸ்தானிடம் கூறினோம், பாகிஸ்தான் போரை நிறுத்தினால் நாங்களும் நிறுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தோம். பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு, போரை நிறுத்தியது. எனவே, இந்த போர் நிறுத்தத்திற்கு மூன்றாவது தரப்பின் தலையீடு இல்லை. குறிப்பாக, அமெரிக்காவின் தலையீடு இல்லை" என்று கூறினார்.
 
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, டிரம்பிடம் மோடி சரண் அடைந்துவிட்டார் என்று விமர்சனம் செய்த நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி., அமெரிக்காவில் இருந்தபடியே இந்த கருத்தை மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments