தெலங்கானாவின் இரண்டாவது முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ்.
70 ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவை தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை இருந்தது. அதனால் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் என்பதால் முன்கூட்டியே சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு 6 மாதங்கள் முன்கூட்டியே டிசம்பரில் தேர்தலைச் சந்தித்தார்.
காங்கிரஸ் தெலுங்கு தேசத்தோடு கூட்டணி அமைத்து இவரை விழ்த்த வியூகம் அமைக்க காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் என எல்லாப் பெரியக் கட்சிகளையும் தோற்கடித்து 110 தொகுதிகளில் 88 தொகுதிகளை வென்றுள்ளார்.
தனிப்பெரும்பாண்மையை நிரூபித்த சந்திரசேகர் ராவ்வை ஆட்சியமைக்க தெலங்கானா ஆளுநர் அழைத்திருந்தார். அதன் படி சற்று முன்னர் தெலங்கானாவின் இரண்டாவது முதலவராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவருக்க ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்,