1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

Mahendran
சனி, 2 ஆகஸ்ட் 2025 (11:16 IST)
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் கீழ், வெறும் ரூ.1 செலுத்தி பிஎஸ்என்எல் சிம் கார்டு பெறலாம்.
 
சலுகையின் முழு விவரங்கள்:
 
ஒரு பிஎஸ்என்எல் சிம் கார்டை வெறும் ரூ.1 செலுத்திப் பெறலாம்.
 
இந்த சலுகை ஆகஸ்ட் மாதம் முழுவதும், அதாவது 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
 
இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவையை இலவசமாக அனுபவிக்க முடியும்.
 
வரம்பற்ற குரல் அழைப்புகள்.
 
தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா.
 
தினமும் 100 குறுஞ்செய்திகள்.
 
இந்த சலுகை, இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை பொதுமக்கள் இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சலுகையை பெற விரும்பும் பொதுமக்கள், அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது முகாம்களுக்கு சென்று இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments