Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவிலிருந்து விலகி மம்தா கட்சியில் இணைந்த எம்.எல்.ஏ.. கடந்த 3 ஆண்டுகளில் 8வது எம்.எல்.ஏ..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (15:40 IST)
ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போது ஒரு கட்சியில் இருந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்னொரு கட்சிக்கு தாவி வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக இந்த முறை பல கட்சியில் இருந்து பிரமுகர்கள் பாஜகவுக்கு தாவி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டும் பாஜகவில் உள்ள எம்எல்ஏக்கள் மம்தா கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து பாஜகவில் இருந்து 7 எம்எல்ஏக்கள் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில் தற்போது 8 வது எம்எல்ஏ ஒருவர் அந்த கட்சியில் இணைந்துள்ளார்

மேற்கு வங்க மாநிலத்தில் முகுந்த் மணி அதிகாரி என்ற பாஜக எம்எல்ஏ திடீரென இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தன் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை என்பதால் தான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதனால் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments