ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்துக்கு பாஜக பாராட்டு.. என்ன காரணம்?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:59 IST)
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜவான் படத்திற்கு பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது. 
 
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை ஜாவன் திரைப்படம் அம்பலப்படுத்தியதாக பாஜக தெரிவித்துள்ளது.  பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறிய போது ’ஊழல் நிறைந்த முந்தைய காங்கிரஸ் அரசை ஜவான் படத்தில் அம்பலப்படுத்திய ஷாருக்கான் மற்றும் அட்லிக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். 
 
கடந்த 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்  நடந்த ஊழலை இந்த படம் நினைவுபடுத்துகிறது என்று கூறினார். 
காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் ஆகிய ஊழல்கள் முந்தைய அரசியல் இருந்தது என்றும் தற்போதைய மோடி தலைமையிலான அரசு ஊழலற்ற அரசாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments