Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியை அடுத்து மும்பை பிபிசி அலுவலகத்திலும் சோதனை.. காங்கிரஸ் கிண்டல்..!

raid
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (13:48 IST)
டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது முன்பு உள்ள பிபிசி அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் இரண்டு அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் முதல் கட்டமாக ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான ஆவண திரைப்படம் சமீபத்தில் பிபிசி வெளியிட்ட நிலையில் அதற்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வருமான வரி சோதனை உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அதாவது ஜேபிசி வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம், ஆனால் இந்த அரசு பிபிசியை துரத்துகிறது என காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் கிண்டல் செய்துள்ளார். 
 
ஆனால் தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரியினர் விளக்கம் அளித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 50,000 கோடி நஷ்டம்: 24வது இடத்திற்கு சரிந்த அதானி..!