Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணத்தில் நடனமாடிய மனைவியை அடித்துக் கொன்ற இளைஞர்

திருமணத்தில்  நடனமாடிய மனைவியை அடித்துக் கொன்ற இளைஞர்
, திங்கள், 12 ஜூன் 2023 (14:08 IST)
திருமணத்தில்  நடனமாடிய மனைவியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீஸர் கைது செய்தனர்.

ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பைகாபாடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திர சிங்(35). இவரது மனைவி ஷர்மிளா சிங்( 30). நேற்று முன்தினம் இவர்கள் பக்கத்தில் வசிக்கும் ஒருவரின் திருமணத்திற்கு ஜோடியாக சென்றனர்.

அந்த திருமணத்திற்கு வருகை புரிந்த  உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நடனமாடி, தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

இவர்களுடன் இணைந்து ஷர்மிளாவும் நடனமடினார். இது, ராமச்சந்திர சிங்கிற்குப் பிடிக்கவில்லை. இதனால், கோபமடைந்தார்.

அதன்பின்னர், திருமணம்  முடிந்து, இருவரும் வீடு திரும்பினர்.  அப்போது, திருமண வீட்டில் எதற்கு நடனம் ஆடினாய்? என்று ராமச்சந்திர சிங் மனைவியிடம் கேட்டுள்ளார்.

இதில், இருவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் முற்றியதால்,  ராமச்சந்திர சிங்க் மனைவி ஷர்மிளாவை தாக்கினார்.

இத்தாக்குதலில் ஷர்மிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஷர்மிளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராமச்சந்திர சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

700 இந்திய மாணவர்களை நாடு கடத்த கனடா உத்தரவு.. பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா