Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.! ஆக்சிஜனை துண்டித்து கணவன் கொலை.!!

Senthil Velan
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (18:52 IST)
லக்னோவில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் உதவியாளரும், ஆக்சிஜனை துண்டித்து அந்த பெண்ணின் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி,  உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து பெண் ஒருவர் பார்த்து வந்துள்ளார்.   தனியார் மருத்துவமனையில் தொடர்ந்துசிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததால் கணவரை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆம்புலன்ஸில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார்.
 
இந்நிலையில் ஆம்புலன்ஸை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு ஓட்டுனரும், உதவியாளரும் அந்த பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட்-ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் அந்த பெண்ணின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


ALSO READ: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.! உயரம் தாண்டுதலில் அசத்திய பிரவீன் குமார்.!


இது குறித்து தற்போது அந்த பெண் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த உதவியாளர் ரிஷஇப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்   ஆம்புலன்ஸ் ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்