வடகிழக்கு மாநிலங்களுக்கு 2013இல் அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வரவு 27.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2012ஆம் ஆண்டு 12.5 சதவீதம் உயர்ந்தது. 2013இல், இந்த வளர்ச்சி 100 சதவீதம் உயர்ந்து, 27.9 சதவீதம் பதிவு செய்யப்பட்டது.
2012ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2013ஆம் ஆண்டு அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வரவு கீழ்க்கண்ட மாநிலங்களில் பெற்றுள்ள வளர்ச்சி விகிதம் வருமாறு-
மணிப்பூர் - 154.7 சதவீதம்,
அருணாச்சலப் பிரதேசம் - 111.2 சதவீதம்,
திரிபுரா - 51.2 சதவீதம், நாகாலாந்து - 32.7 சதவீதம்,
மேகாலயா - 27.5 சதவீதம்,
சிக்கிம் - 19.7 சதவீதம்,
மிசோரம் - 7.5 சதவீதம்,
அசாம் - 0.5 சதவீதம்
இந்த விகிதத்தில் அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது.