கமலுக்கு மட்டுமே இது சாத்தியம் : விஸ்வரூபம்2 டிவிட்டர் விமர்சனம்

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (09:47 IST)
நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தை பற்றி ஏராளமான நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

 
2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஆண்டிரியா, பூஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளிநாடுகளில் வெளியானது. அதேபோல், இன்று காலை தமிழகத்திலும் வெளியானது.
 
இந்நிலையில், தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள் முதல் பாகம் பற்றியும், பார்த்து முடித்தவர்கள் படத்தை பற்றி கருத்துகளை டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

 
விஸ்வரூபம் 2 பட இடைவேளையில் இருக்கிறேன். இந்த படம் பாம்பு போல உங்களை சுற்றிக்கொள்ளும், இருக்கையின் நுனியிலேயே உங்களை வைத்திருக்கும். செம ஆக்‌ஷன் என ஒருவர் பதிவிட்டுள்ளர்.
 
முதல் பாகம் நன்றாக இருக்கிறது. நகைச்சுவையும், ஆக்‌ஷனும் சூப்பராக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 
விஸ்வரூபம் படம் உலக அளவில் இருக்கிறது. ரா ஆக்‌ஷன் மற்றும் சண்டை காட்சிகளும், திரைக்கதையும் அருமை. கமல்ஹாசன் ரசிகர் அல்லாதாருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும். இந்த படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
 
கமல்ஹாசனால் மட்டுமே இதுபோன்ற திரைப்படத்தை எடுக்க முடியும். சில காட்சிகள் நீளமானதாக இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் நடித்துள்ள பூஜாகுமார் உங்கள் இதயத்தை வெல்வார் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
 
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள தண்ணீருக்கு அடியில் நடக்கும் காட்சிகள் அருமையாக இருக்கிறது. படத்தின் திரைக்கதை ஹாலிவுட் படம் போல் அமைக்கப்பட்டுள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

ஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி!

ஜூலி வெளியிட்ட அந்த போட்டோ: விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

ஏமாற்றிய சிவகார்த்திகேயன்: வருத்தத்தில் ரசிகர்கள்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்

நெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...!

தொடர்புடைய செய்திகள்

சிம்புவுடன் இணையும் இளம் நடிகர்: அதிரடி ஆக்சன் படம் குறித்த அறிவிப்பு

குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!!!

ஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்! நாயகி யார்?

அவன் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ்: யாஷிகாவிற்கு ஏன் இந்த கோபம்?

முன்னழகில் கவர்ச்சி காட்டி அனேகன் பட நடிகையின் குளு குளு போட்டோ ஷூட்!

அடுத்த கட்டுரையில்