Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது-காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருத்தகை!

அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது-காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருத்தகை!

J.Durai

கோயம்புத்தூர் , புதன், 10 ஏப்ரல் 2024 (08:54 IST)
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில்  வரும் ஏப்.12 ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகள்  பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. 
 
இதனை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருத்தகை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறியதாவது:
 
கோவையில் மிக பிரம்மாண்டமாக பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் அமரும்  வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் 12 ம் தேதி  கூட்டத்திக்கு பிறகு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா அளவில்  பெரிய திருப்பம் ஏற்படும். இக்கூட்டத்தில் முக்கிய  பிரகடனங்கள் செய்யப்பட இருக்கின்றது. 
மோடி ரோடு ஷோ பேனர் குறித்த கேள்விக்கு தற்போது தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில்  அரசு இருக்கின்றது.  என்னுன்ன வழிகாட்டுதல் இருக்கின்றதோ அதன்படி நடக்க வேண்டும். அனுமதி பொறாமல் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. 
அடுத்தது உள்ளாட்சி தேர்தல் நடைபெற  இருக்கிறது.
 
அப்போது  பிரதமர் தெரு தெருவாக வாக்கு சேகரிக்க போகின்றார். எங்கள் தலைவர்கள் எல்லாம் மக்களை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திக்கிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமர் பேராசையில் தமிழ்நாட்டில் ஏதாவது சாதித்து விடலாம்,  தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கின்றார். ஆனால் தமிழக மக்கள் இவரது உண்மை முகம் தெரிந்தவர்கள், ஆதரிக்க மாட்டார்கள். ஒரு போதும் தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை.  
 
பிரதமர் நிலைமை பரிதாபமாக உள்ளது.இந்தியாவிலேயே பெரிய ஊழல் தேர்தல் பத்திரம் குறித்தோ , 7.5 லட்சம் கோடி ஊழல்  போன்றவை குறித்து பேச மறுக்கின்றார் பிரதமர்.ஒரு விரல் பிறரை நோக்கி நீட்டினால் , 4 விரல் அவரை நோக்கி இருக்கும் என்பதை மறந்து விடுகின்றார். 
 
தேர்தல் நன்கொடை  குறித்து சென்னை , கோவையில் பிரதமர் பேச வேண்டும். தேர்தல் பத்திரம் குறித்து வாயை திறக்க மாட்டேன் என்கின்றார் பிரதமர். காவிரி விவகாரத்தில் பா.ஜ.கவுடன் இருந்த போது அதிமுக என்ன செய்தது. நாடாளுமன்றத்தை முடக்கியதாக சொல்வது வேறு விவகாரங்களுக்காக சிஏஏ, என்ஆர்சி,  வேளாண் சட்டம் ஆகியவற்றை பாஸ் பண்ண வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் உறுதுணையாக அதிமுகவினர் இருந்தனர்.காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் இணைந்து செயல்படுவோம். உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் காவிரியில் எதுவும்  செய்யமுடியாது. கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்ப தேவையில்லை . தமிழ்நாடு காங்கிரஸ் சொல்வதை கேளுங்கள்.
 
காவிரியில் அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை கட்டுவதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழலைப் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜக-அமைச்சர் பிடிஆர்!