2014ல் நம்பிக்கை.. 2019ல் உறுதி.. 2024ல் உத்திரவாதம்..! பிரதமர் மோடி கேரண்டி..!!

Senthil Velan
புதன், 17 ஏப்ரல் 2024 (12:57 IST)
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பாரபட்சம் இன்றி அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் வருகிற 19ஆம் தேதி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து அடிக்கடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
இந்நிலையில் இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 2014 ஆம் ஆண்டு நம்பிக்கையையும், 2019 ஆம் ஆண்டு உறுதியான உணர்வையும் மக்களிடையே கொண்டு வந்தேன் என தெரிவித்தார்.
 
2024 ஆம் ஆண்டு உத்திரவாதத்தை கொண்டு வருவேன் எனவும் இது மோடியின் கேரண்டி எனவும் தெரிவித்தார். மேலும் 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை பத்தாண்டுகளில் செய்து முடித்தேன் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

ALSO READ: இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்.! தலைவர்கள் - வேட்பாளர்கள் இறுதிகட்ட பரப்புரை..!!
 
எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற மந்திரத்தை பின்பற்றும் கட்சி பாஜக என்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பாரபட்சம் இன்றி அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள்  வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments