Webdunia - Bharat's app for daily news and videos

Install App

OnePlus 11 மற்றும் 11R 5G முன்பதிவு தொடக்கம்! அட்டகாசமான சிறப்பம்சங்கள்! - முழு விவரம் இதோ!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (13:06 IST)
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய வெளியீடுகளான OnePlus 11 மற்றும் 11R மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் என பல ஸ்மார்ட் தயாரிப்புகளை வழங்கி முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்ப்ளஸ். இந்த நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்ப்ளஸ் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களான OnePlus 11 மற்றும் OnePlus 11R ஆகியவற்றை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.


 
OnePlus 11 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

 
 
OnePlus 11 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டது ரூ.54,999க்கும், 16ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டது ரூ.61,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு பிப்ரவரி 7 முதல் தொடங்கியுள்ளது.




OnePlus 11R 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 
 
OnePlus 11R 5G ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டது ரூ.39,999க்கும், 16ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டது ரூ.44,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது.

OnePlus 11 5ஜி விற்பனை பிப்ரவரி 14ம் தேதியும், OnePlus 11R 5G பிப்ரவரி 28ம் தேதியும் விற்பனையை தொடங்குகிறது. மேலும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் OnePlus Buds Pro 2R, OnePlus TV Q2 Pro 65, OnePlus Pad ஆகியவற்றின் அறிமுகம் இன்று நடைபெறுகிறது. இவற்றின் விற்பனையும் விரைவில் தொடங்க உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments