ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Mahendran
சனி, 18 அக்டோபர் 2025 (18:15 IST)
ஏடிஎம் மற்றும் கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளை 10 வினாடிகளுக்கும் அதிகமாக கையில் வைத்திருப்பது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரசீது காகிதங்களில் 'பிஸ்பெனால் எஸ்' என்ற ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம் தோல் வழியாக எளிதில் உடலுக்குள் சென்று, ஹார்மோன்களை பாதிக்கக்கூடிய 'மிமிக் ஈஸ்ட்ரோஜன்' கலவையாக செயல்படுகிறது.
 
ஆண்களுக்கு: விந்தணு உற்பத்தியை குறைப்பது, மூளை செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற அபாயங்கள் உள்ளன.
 
பெண்களுக்கு: மார்பகப் புற்றுநோய் அபாயத்தை உருவாக்கலாம்.
 
தொடர்ந்து ரசீதுகளை கையாளும் கடைகளின் ஊழியர்கள் அதிக அபாயத்தில் உள்ளனர்.
 
தவிர்க்கும் வழிகள்:
 
தேவையற்ற ரசீதுகளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
 
ரசீதை கையாள்வோர் கையுறை அணியலாம்.
 
ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்திய பின், இந்த ரசீதுகளை தொடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments