Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஃபர்களை அள்ளி தரும் அமேசான்: வந்து குவிந்த விற்பனையாளர்கள்!

ஆஃபர்களை அள்ளி தரும் அமேசான்: வந்து குவிந்த விற்பனையாளர்கள்!
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (10:42 IST)
அமேசான் தனது விழாக்கால விற்பனையை துவங்க இருக்கும் நிலையில் புதிய விற்பனையாளர்கள் பலர் அமேசானில் இணைந்துள்ளனர்.

ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் விழாக்காலங்களில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வழக்கம். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு தனது விழாக்கால விற்பனையை 29ம் தேதி தொடங்க உள்ளது அமேசான். இதற்காக சென்னையில் ஒரு தனி கிடங்கையும் அமைத்திருக்கிறது அமேசான்.

இந்த 2019 வணிக வருடத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் புதிய விர்பனையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. தற்போது விழாக்கால விற்பனையை முன்னிட்டு விற்பனையாளர்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 29ம் தேதி தொடங்கும் இந்த விழாக்கால விற்பனையால் 10 கோடி புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என அமேசான் கணித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் விரும்பும் விதமான பண்டிகை பொருட்களையும், கைவினை பொருட்களையும் பிரதானமாக விளம்பரப்படுத்தவும், சலுகைகள் அளிக்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. துணி வகைகள், அழகு பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களில் புதிய வகைகளை அறிமுகம் செய்யவும், சலுகைகள் வழங்கவும் விற்பனையாளர்களும், அமேசானும் திட்டமிட்டுள்ளனர். புதிய பிராண்ட் மொபைல்கள் களம் இறங்க இருப்பதால் பழைய மாடல் மொபைல்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர சில விற்பனையாளர்கள் கோம்போ ஆஃபர்களை அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துணி வகைகள், ஆடம்பர பொருட்கள், அவசிய பொருட்கள் சேர்ந்த கோம்போ ஆஃபரில் பொருட்களை மொத்தமாக குறைந்த விலைக்கும் வாங்கலாம்.

செப்டம்பர் 29ம் தேதி சாதாரண வாடிக்கையாளர்களுக்கு தொடங்கும் இந்த விழாக்கால விற்பனை அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 28 மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு கழிவும் வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகனுக்குத் திருமணம் - நளினியை அடுத்து ராபர்ட் பயஸும் பரோல் வேண்டி மனுத்தாக்கல்