நடிகைகளுடன் மட்டும் டேட்டிங் கிடையாது
, செவ்வாய், 25 மார்ச் 2014 (10:02 IST)
நடிகையுடன் மட்டும் டேட்டிங் கிடையாது - இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பவர் வருண் தவான். இயக்குனர் டேவிட் தவானின் மகன். திடீரென்று ஏனிந்த கசப்பான அறிக்கை?
ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான வருண் தவான் தற்போது தனது தந்தை டேவிட் தவானின் இயக்கத்தில் மெய்ன் தேரா ஹீரோ படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் வெளிவர உள்ளது. இதில் நர்கீஸ் பக்ரி, இலியானா என இரண்டு ஹீரோயின்கள்.படத்தின் பிரமோஷனில் பேசிய இலியானா வருண் தவானை வானளாவப் புகழ்ந்து வருண் மாதிரி ஒருவரைதான் கல்யாணம் கட்டிப்பேன் என்றார். அதிலிருந்து இருவருக்குள்ளும் காதல் என்று இன்டஸ்ட்ரியில் பேச்சு. வளர்கிற நேரத்தில் இதென்ன வம்பு? ஓபனாகவே இதுபற்றி கருத்து தெரிவித்தார் வருண்.எந்த காலத்திலும் நடிகைகளுடன் டேட்டிங் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று தெரிவித்தார். இதனால் அதிகம் அதிர்ச்சிக்குள்ளானவர் இலியானாதான் என்கிறார்கள். அவரின் அந்தரங்க ஆசையை தெரிந்து கொண்டேதான் இப்படியொரு கருத்தை வெளிப்படையாக அறிவித்தார் வருண் என்றும் கூறுகிறார்கள்.வருணின் ஸ்டேட்மெண்டால் துளிர் விடும் முன்பே கருகியது இலியானாவின் காதல் செடி.