ஹேப்பி நியூ இயர் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷேக்பச்சன், பொமன் இரானி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இயக்கம் ஃபரா கான். ஷாருக்கான் ஃபரா கான் இயக்கத்தில் இதுவரை நடித்த படங்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்.
ஷாருக், தீபிகா, ஃபரா கான் மூவர் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த படம் ஓம் சாந்தி ஓம். தீபிகா படுகோன் இந்தப் படத்தில்தான் இந்தியில் அறிமுகமானார். இப்படம் பம்பர் ஹிட்டானதுடன் ஷாருக்கானின் ஸ்டார் வேல்யூவையும் அதிகப்படுத்தியது.
ஓம் சாந்தி ஓம்-க்குப் பிறகு இவர்கள் மூவரும் இணையும் படம் ஹேப்பி நியூ இயர். ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்து வருகிறார். உலகம் முழுக்க இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், சென்னை எக்ஸ்பிரஸைத் தாண்டி இப்படம் வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் உலகளாவிய வெளியீட்டு உரிமையை தற்போது ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.
தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிட உள்ளனர். இந்த வருடம் தீபாவளிக்கு ஹேப்பி நியூ இயர் வெளியாகிறது.