மீனாட்சி. 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில் புடவையில் பாந்தமாக மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்தார். கரண் மற்றும் வடிவேலு நடிக்க படம் ஹிட்டானது. ஆனாலும், அடுத்த படங்கள் உடனே அமையவில்லை.
வருத்தத்தில் இருந்தவருக்கு இப்போது தொடர்ந்து படங்கள் குவியத் தொடங்கியிருக்கிறது. காரணம் கிளாமராக நடிப்பேன் என்று சொன்னதோடு, அசத்தலான கவர்ச்சி ஸ்டில்களை எடுத்து நிறுவனங்களுக்கு அனுப்பி வாய்ப்பு வேட்டை நடத்தியிருக்கிறார்.
அப்படி நடத்தியதில் 'அஞ்சாதே' அஜ்மலுடன் 4777 படத்தில் ஜோடியாகவும், ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் 'ராஜாதிராஜா' படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் நெப்போலியன் நடிக்கும் 'பள்ளிகொண்டபுரம்' படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் கிராமத்துப் பெண்ணாக வருகிறார்.
அத்தோடு மேலும் ஒரு படத்துக்கான வாய்ப்பு வந்திருக்கிறது. 'தி.நகர்' படத்தை இயக்கிய திருமலை தற்போது ஷாம் ஹீரோவாக நடிக்கும் 'அகம்புறம்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அந்தப் படத்தில் ஏற்கனவே 'வட்டாரம்' படத்தில் நடித்த கீரத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலான மீனாட்சி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆக, தமிழ் சினிமாவில் மீனாட்சி காட்டில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது.