மீண்டும் உச்சத்தைத் தொடும் தக்காளி விலை! – இன்றைய மார்க்கெட் நிலவரம் என்ன?

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (08:42 IST)
கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தக்காளி விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.



வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதுமே தக்காளி விலை உயர்வை சந்தித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகபட்சமாக தக்காளி கிலோ ரூ.170 வரை உயர்ந்தது. பின்னர் கடந்த வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைந்து ரூ.100 வரை விற்பனையானது.

இந்நிலையில் இந்த வாரத்தில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.10 விலை உயர்ந்து ரூ.160க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று மேலும் ரூ.10 விலை உயர்ந்து ரூ.170 ஆக விற்பனையாகி வருகிறது.
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments