Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு 306 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (18:53 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிட்டத்தட்ட காலிறுதி போன்ற ஒரு போட்டி தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் வெல்லும் அணியை பொருத்தே அரையிறுதிக்கு செல்லும் அணி எது? வெளியேறும் அணிகள் எவை? என்பது முடிவு செய்யப்படும்
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பெயர்ஸ்டோ மற்றும் ஜேஜே ராய் அபாரமாக விளையாடினர். பெயர்ஸ்டோ 106 ரன்களும், ஜேஜே ராய் 60 ரன்களும் எடுத்தனர். அதன்பின் ஓரிரு விக்கெட்டுக்கள் விழுந்தாலும் கேப்டன் மார்கன் ஓரளவு நிலைத்து ஆடி 42 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ரன்கள் எடுத்தது. 
 
நீஷம், ஹென்ரி, போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களளயும், சாண்ட்னர் மற்றும் செளதி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்னும் சில நிமிடங்களில் 306  ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி உறுதியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின்னர் அரையிறுதிக்கு தகுதி பெறும் நான்காவது அணி எது என்பதை வரும் போட்டிகள் முடிவு செய்யும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments