இந்தியாவுக்கு எதிரானப் போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்… UAE கேப்டன் நம்பிக்கை!

vinoth
புதன், 10 செப்டம்பர் 2025 (15:00 IST)
17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. தொடர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் UAE அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இதுவரை இந்திய அணியை நான்கு போட்டிகளில் எதிர்கொண்டுள்ள UAE. அந்த நான்கு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் UAE கேப்டன் முகமது வசீம் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் எனக் கூறியுள்ளார். மேலும் “எல்லா போட்டிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதான். திட்டமிட்டதைக் களத்தில் செயல்படுத்துவோம். எல்லா அணிகளும் இங்கு அதிகமாகக் கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஆனால் இது எங்கள் சொந்த மைதானம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments