ஷுப்மன் கில்லை ஓப்பனராக இறக்க வேண்டாம்… சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் காரணம்!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (07:05 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி சார்பில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் சில வீரர்களில் ஷுப்மன் கில்லும் ஒருவர். இந்நிலையில் இப்போது அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

அந்த அணியில் ருத்துராஜ்- ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அதனால் இதில் எந்த இரண்டு வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் “ருத்துராஜ், ஜெய்ஸ்வால் கூட்டணியை மாற்றக் கூடாது. அதற்கு பதிலாக ஷுப்மன் கில்லை மூன்றாவது வீரராக களமிறங்கலாம். அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் என வரிசையாக வீரர்கள் இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments