ப்ளே ஆஃப் போட்டிகளில் எளிதான வெற்றி… வரலாற்றுச் சாதனைப் படைத்த RCB!

vinoth
வெள்ளி, 30 மே 2025 (08:38 IST)
ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. வெறும் 102 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, மிக எளிதில் பஞ்சாப் அணியை வீழ்த்தியவுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பெங்களூர் அணியில் சுயாஷ் ஷர்மா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து பேட் செய்ய வந்த பெங்களூரு அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் ஃபில் சால்ட் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக 10 ஆவது ஓவரின் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்து பெங்களூர் அணி இலக்கை எட்டியது.

ஒரு ப்ளே ஆஃப் போட்டியில் அதிக பந்துகள் மீதமிருக்க வெற்றியைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்த வெற்றியின் மூலமாகப் பெற்றுள்ளது பெங்களூர் அணி. இதன் மூலம் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது பெங்களூரு அணி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments