ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

vinoth
செவ்வாய், 11 நவம்பர் 2025 (08:26 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதன் பிறகு 17 ஆண்டுகளாக அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சஞ்சு சாம்சன் வழிநடத்தினாலும் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு சஞ்சுவைக் கொடுத்துவிட்டு வேறு வீரரை டிரேட் செய்ய ராஜஸ்தான் முயல்வதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த அணிக்குப் புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது துருவ் ஜுரெல் ஆகிய இருவரில் ஒருவருக்குக் கேப்டன் பொறுப்புக் கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சன் - ஜடேஜா மாற்றம் நடந்தால், சிஎஸ்கே இந்த வீரரை வாங்க வேண்டும்: அஷ்வின் கொடுத்த ஐடியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்… ஸ்ரேயாஸ் ஐயர் சந்தேகம்!

ஜடேஜா- சாம்சன் டிரேட் முடிவதில் தாமதம்… ராஜஸ்தான் அணிக்கு எழுந்த சிக்கல்!

எப்போது ஓய்வு? – ஓப்பனாக அறிவித்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments