நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்கு சென்ற மும்பை இந்தியன்ஸ்!

vinoth
வியாழன், 22 மே 2025 (07:41 IST)
ஐபிஎல் 2025 சீசனின் லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கனவே குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று நான்காவது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆவது முறையாக ப்ளே ஆஃப் தொடருக்கு தேர்வாகியுள்ளது.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் விளையாடிய மு.இ. 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 43 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் வாய்ப்பை டெல்லி கேப்பிடல்ஸ் அணி இழந்தது. நான்கு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தேர்வாகிவிட்ட நிலையில் இனிவரும் போட்டிகள் ஒப்புக்குதான் நடக்கவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments