Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியோடு உலகக் கோப்பையில் இருந்து விடைபெற்ற ஆப்கானிஸ்தான்!

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (07:23 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிகட்ட போட்டிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் அஸ்மத்துல்லா அதிகபட்சமாக 97 ரன்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் ஜெரால்ட் கோயெட்ஸி 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதன் பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி நிதானமாக ஆடி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 247 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்த தொடரில் மொத்தம் 4 வெற்றிகளை பெற்று அரையிறுதி வாய்ப்பை கடைசி வரை தக்கவைத்து மற்ற அணிகளுக்கு போட்டியாக இருந்தது ஆப்கானிஸ்தான் அணி என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments